சுவிஸில் பிறந்த Liechtenstein-ன் இளவரசர் 51 வயதில் திடீர் மரணம்
Liechtenstein இளவரசர் கான்ஸ்டன்டின் தனது 51வது வயதில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக அரச குடும்பம் அறிவித்துள்ளது.
லிச்சென்ஸ்டீன் இளவரசர்
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு இடைப்பட்ட சிறிய நாடு லிச்சென்ஸ்டீன்.
இந்நாட்டின் இளவரசர் இரண்டாம் ஹான்ஸ் ஆடமின் மூன்றாவது மகன் கான்ஸ்டன்டின் (Constantin). இவர் அரியணைக்கு ஏழாவது மகன் ஆவார்.
சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் தனது 51வது வயதில் காலமானதாக அந்நாட்டு அரச குடும்பம் அறிவித்துள்ளது. எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கான்ஸ்டன்டினின் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா திரும்பிய உக்ரேனிய முன்னாள் அமைச்சர் படுகொலை! புடின் உதவியாளர்களுக்கு இதே கதி தான் ஏற்படும் - இராணுவ செய்தித்தொடர்பாளர்
அஞ்சலி
இளவரசரின் மறைவுக்கு அரச குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநில நாடாளுமன்றம் புதன்கிழமை அன்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
1999ஆம் ஆண்டு மேரி கல்நாக்கி டி கொரோஸ்படக் என்பவரை கான்ஸ்டன்டின் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மோரிட்ஸ் (20), ஜினா (18) மற்றும் பெனடிக்ட் (15) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இளவரசர் கான்ஸ்டன்டின் லிச்சென்ஸ்டீன் குரூப் AGயின் தலைவராகவும், லிச்சென்ஸ்டீன் குரூப் ஹோல்டிங் AGயின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |