அகதிகள் முகாமில் மின்னல் தாக்கி 14 பேர் பலி
உகாண்டாவில் உள்ள அகதிகள் முகாமில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை மாலை ஒரு தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 34 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் அனைவரும் குழந்தைகள் என அதிகாரி ஒருவர் உள்ளூர் வானொலியிடம் தெரிவித்தார்.
உகாண்டாவின் வடமேற்கில் உள்ள பலாபெக் அகதிகள் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் சமீபத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலாபெக் அகதிகள் குடியிருப்பில் 80,000-க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் அண்டை நாடான தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு உகாண்டாவில் உள்ள அருவா நகரில் மின்னல் தாக்கி 10 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
கால்பந்து விளையாட்டின் இருந்து ஓய்வு எடுக்கும் போது குழந்தைகள் தாக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |