உலகளவில் 4 வது பெரிய கூட்டம் - சாதனை புத்தகத்தில் இந்திய பாடகர் ஜுபின் கார்க்கின் இறுதி நிகழ்வு
பாடகர் ஜுபின் கார்க்கின் இறுதி நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஜுபின் கார்க் உயிரிழப்பு
52 வயதான ஜுபின் கார்க், அசாம், ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தார். இவர், தமிழ் உள்ளிட்ட 40 பிற மொழிகளில், 38,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற வடகிழக்கு விழாவில் அங்கு சென்றிருந்தார். கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி, அங்குள்ள கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்ட போது, மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
Shocked by the sudden demise of popular singer Zubeen Garg. He will be remembered for his rich contribution to music. His renditions were very popular among people across all walks of life. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 19, 2025
அவரின் மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்த அசாம் மாநில அரசு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்தது.
லிம்கா சாதனையில் இறுதி நிகழ்வு
இதைத்தொடர்ந்து அவர் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டடது. சிங்கப்பூரில் நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவில், அவர் நீரில் மூழ்கி இறந்தார் என கூறபட்டது.
இதனை தொடர்ந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி அவரது உடல் அஞ்சலிக்காக அர்ஜுன் போஹேஸ்வர் விளையாட்டு திடலில் வைக்கப்பட்டது.
அவரது உடலை காண, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர். இதன் மூலம், அவரது இறுதி சடங்கு, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
உலகளவில், மைக்கேல் ஜாக்சன், போப் பிரான்சிஸ் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கு அடுத்தபடியாக இறுதி சடங்கில் அதிக மக்கள் கூடியது ஜுபின் கார்க்கிற்கு தான் என லிம்கா சாதனை புத்தகம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவின் குவஹாத்தி மருத்துவக் கல்லூரியில் 2வது முறையாக அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சியில் உள்ள தகனக் கூடத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
அவரின் நினைவாக நினைவு சின்னம் கட்டப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |