திருமணத்திற்கு சிங்கக்குருளையை பரிசளித்த யூடியூபர்: வீடியோ வைரலால் நீதிமன்ற உத்தரவு
பாகிஸ்தானின் பிரபல யூடியூபரின் திருமணத்திற்கு சிங்கக்குருளை பரிசளிக்கப்பட்டது வைரலானதால் நிதியுதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிங்கக்குருளை பரிசு
ராஜப் பட் என்பவர் பாகிஸ்தானின் பிரபல யூடியூபராக உள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு வந்த சக யூடியூபர் ஒருவர் சிங்கக்குருளையை பரிசாக வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு முன்னால் தங்கச் சங்கிலியால் கட்டப்பட்ட கூண்டில் அவருக்கு வழங்கப்பட்டபோது, அதுதொடர்பான படங்கள் ஒன்லைனில் வேகமாக பரவின.
அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார் சிங்கக்குருளையை பறிமுதல் செய்தனர். மேலும் புதுமணத்தம்பதியை இரவு முழுவதும் காவலில் வைத்திருந்தனர்.
5 நிமிட வீடியோ
பஞ்சாப் மாகாண வனவிலங்குத் துறையின் ஆய்வாளர் பைசல் முஷ்டாக் "சமூக ஊடகங்கள் மூலம் சிங்கக்குருளையைப் பற்றி நாங்கள் கண்டுபிடித்தோம்" என தெரிவித்தார்.
பின்னர் ஆவனமற்ற காட்டு விலங்கை வைத்திருந்ததாக ராஜப் பட் ஒப்புக்கொண்டார். இதனால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதத்தில் இருந்து அவர் தப்பினார்.
எனினும், ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் விலங்கு உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 5 நிமிட வீடியோவை அவர் இடுகையிட வேண்டும் என்று நீதிபதி ஹமீத் உல் ரஹ்மான் நசீர் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |