தந்தையை இழந்த லியோனல் மெஸ்ஸி..ரசிகர்கள் இரங்கல்
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சனையால் காலமானார்.
லியோனல் மெஸ்ஸி
உலகளவில் கால்பந்து ஜாம்பவானாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). பிபா 2026 உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.
தற்போது மெஸ்ஸி தனது இன்டர் மியாமி கிளப் அணிக்காக லீக்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி 68 வயதில் காலமானார். இந்த செய்தியை அர்ஜென்டினாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
பின்னர் மெஸ்ஸி விளையாடிய அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்ஜ் மெஸ்ஸி 7ஆம் திகதி அன்று, குடும்ப இல்லத்திற்கு அருகிலுள்ள ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
சமீபத்திய மாதங்களில் மெஸ்ஸியின் தந்தை உறுதிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக, அவர் தனது சொந்த நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |