சர்க்கஸில் பயிற்சியாளரை கடித்துக் குதறிய சிங்கம்... அதிர்ச்சியில் வலிப்பு வந்து துடித்த கர்ப்பிணி: ஒரு கோர சம்பவம்
ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றைக் காண ஏராளமான பார்வையாளர்கள் கூடியிருந்த நிலையில், அவர்கள் கண் முன்னே பயிற்சியாளர் ஒருவரை சிங்கம் ஒன்று கடித்துக் குதறிய கோர சம்பவம் நடைபெற்றது.
Moshkovo என்ற இடத்தில் நடைபெற்ற அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது, Vega மற்றும் Santa என்று பெயரிடப்பட்ட இரண்டு சிங்கங்கள் திடீரென தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கியுள்ளன.
அப்போது, அவற்றின் பயிற்சியாளரான Maxim Orlov சர்க்கஸ் வளையத்திற்குள் நுழைந்திருக்கிறார். அதுவரை Santa என்ற சிங்கத்துடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த Vega என்ற சிங்கம், சட்டென Santaவை விட்டு விட்டு, பயிற்சியாளர் மீது பாய்ந்திருக்கிறது.
Maximஐ அந்த சிங்கம் கடித்துக் குதற, பிற சர்க்கஸ் ஊழியர்கள் குச்சிகளைக் கொண்டு அந்த சிங்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கோரக்காட்சியைக் கண்டு மக்கள் அலறியடித்து ஓட, கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு பயத்தில் வலிப்பு வந்து விட்டிருக்கிறது.
உடனே ஆம்புலன்சை வரவழைத்திருக்கிறார்கள் ஊழியர்கள். Maxim கை கால்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திகிலை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வன விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
வீடியோவை காண - https://www.thesun.co.uk/news/15043271//