சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது கூடாரத்திலிருந்து வெளியேறிய சிங்கங்கள்: திகிலை ஏற்படுத்திய சம்பவம்
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது, சிங்கங்கள் வளையத்திலிருந்து வெளியேறிய சம்பவம் ஒன்று திகிலை ஏற்படுத்தியது.
சர்க்கஸ் கூடாரத்தைவிட்டே வெளியேறிய சிங்கம்
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது, சிங்கங்கள் இரண்டு திடீரென வளையத்திலிருந்து வெளியேற, சர்க்கஸ் பார்க்க பிள்ளைகளுடன் வந்த பெற்றோர் உயிரைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகளுடன் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
Credit: NewsFlare
வெளியேறிய சிங்கங்களில் ஒன்றை ஊழியர்கள் உடனடியாக பிடித்துவிட்டாலும், மற்றொரு சிங்கம் கூடாரத்தைவிட்டே வெளியேறிவிட்டது. அது கார் பார்க்கிங்கில் உலாவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Credit: NewsFlare
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படும் முன் சர்க்கஸ் ஊழியர்கள் இரண்டாவது சிங்கத்தையும் பிடித்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து சர்க்கஸ் காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வீடியோவை காண
Credit: NewsFlare