திருநெல்வேலியில் பள்ளி வகுப்பறையிலேயே மது அருந்திய 6 மாணவிகள் இடைநீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்திய மாணவிகள்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவிகள் ஆறு பேர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்பவம் குறித்து அம்மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த 6 மாணவிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் மது அருந்திய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |