போர்த்துக்கல் Funicular கோர விபத்தில் சிக்கிய ஜேர்மானியர்கள்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
போர்த்துக்கல் நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் கார் விபத்தில் ஜேர்மானியர்கள் இருவர் சிக்கியது தெரிய வந்துள்ளது.
Funicular விபத்து
லிஸ்பனில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய Funicular எனும் எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் கார் விபத்திற்குள்ளானதில் 15 பேர் பலியாகினர்.

இந்திய பெற்றோரிடமிருந்து ஜேர்மன் அதிகாரிகளால் பிரிக்கப்பட்ட குழந்தை: குழந்தையை ஒப்படைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
மேலும் 18 பேர் வரை காயமடைந்தாகவும், அவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெரியவர்கள் என்றும், அவர்களின் குடும்பங்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் லிஸ்பனின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் Margarida Castro Martins தெரிவித்துள்ளார்.
ஜேர்மானியர்கள்
அத்துடன் விபத்தில் 21 பேர் காயமடைந்ததையும், அவர்கள் ஒரு குழந்தை மற்றும் 24 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் காயமடைந்தவர்களில் இருவர் ஜேர்மானியர்கள், இருவர் ஸ்பெயின் நாட்டவர்கள் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, கனடா, மொராக்கோ, தென் கொரியா மற்றும் கேப் வெர்டே நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவருடன் போர்த்துக்கீசியரும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |