டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள்: 5வது இடத்தில் எதிர்பாராத பந்துவீச்சாளர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் விளாசிய வீரர்கள் குறித்து பார்ப்போம்.
பென் ஸ்டோக்ஸ்
கிரிக்கெட் போட்டிகளில் முதன்மையான டெஸ்ட் வடிவ போட்டியில் சிக்ஸர்களை பறக்கவிடுவது என்பது அரிதான ஒன்று.
ஆனாலும், சில வீரர்கள் ஒருநாள், டி20 கிரிக்கெட்டைப் போல் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவர்.
அந்த வகையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மொத்தம் 136 சிக்ஸர்களை டெஸ்டில் பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து) 107 சிக்ஸர்களுடன் உள்ளார்.

டிம் சௌதீ
அவுஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 100 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்க, கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) 98 சிக்ஸர்களுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

யாரும் எதிர்பாராத விதமாக 5வது இடத்தில் ஒரு பந்துவீச்சாளர் உள்ளார். நியூஸிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான டிம் சௌதீ (Tim Southee) 98 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
அவருக்கு பின்னுக்கு தள்ள இந்தியாவின் ரிஷப் பண்ட்டிற்கு (97) இன்னும் 2 சிக்ஸர்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் அதிக சிக்ஸ்:
- பென் ஸ்டோக்ஸ் - 136
- பிரெண்டன் மெக்கல்லம் - 107
- ஆடம் கில்கிறிஸ்ட் - 100
- கிறிஸ் கெய்ல் - 98
- டிம் சௌதீ - 98
- ரிஷப் பண்ட் - 97

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |