ஆசிய கோப்பையின் சிறந்த அணித்தலைவர்கள் - முதலிடம் யார் தெரியுமா?
ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
ஆசிய கோப்பை, கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில், அதிகபட்சமாக இந்தியா 8 முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பையில் இதுவரை சிறப்பாக செயல்பட்ட அணித்தலைவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான தோனி, ஆசிய கோப்பையின் சிறந்த அணித்தலைவராக உள்ளார்.
ஆசிய கோப்பை ODI வடிவத்திலும், T20 வடிவத்திலும் கோப்பை வென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
14 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய தோனி, 64% வெற்றி விகிதத்தில் உள்ளார்.
நாக்அவுட் போட்டிகள் போன்ற அழுத்தமான நேரங்களிலும், தோனியின் ஆக்ரோஷமில்லாத அமைதியான தலைமைத்துவம் அவரை சிறந்த அணித்தலைவராக அடையாளம் காட்டுகிறது.
மொயின் கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மொயின் கான், 2000 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று, இலங்கையுடன் மோதி முதல்முறையாக பாகிஸ்தானுக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.
அவர் தலைமை தாங்கிய 6 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா
இந்திய ODI கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ரோஹித் சர்மா, 2018 மற்றும் 2023 ஆகிய 2 முறையும் இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 80 சதவீத வெற்றி விகிதத்துடன் உள்ளது.
ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் அவர் களத்தில் எடுக்கும் கூர்மையான முடிவுகள் மற்றும் அமைதியான நடத்தை காரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முகமது அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான முகமது அசாருதீன், 1990-91 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரு ஆசிய கோப்பைகளிலும் இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
7 போட்டிகளில் விளையாடியுள்ள அவரது தலைமையிலான இந்திய அணி, 71 சதவீத வெற்றி விகிதத்துடன் உள்ளது.
அர்ஜுன ரணதுங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அர்ஜுன ரணதுங்கா, 1997 ஆசிய கோப்பையில் இலங்கை அணியை வெற்றி பெற வைத்தார்.
13 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, 69 சதவீத வெற்றி விகிதத்துடன் இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |