விமான பயணி கொண்டு வந்த ஒற்றை பொருள்! நடுவானில் விமானத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்து
விமானத்தில் லித்தியம் பற்றரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
நடுவானில் விமானத்தில் தீ
சனிக்கிழமை ஏர் சீனா விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பற்றரி எதிர்பாராத விதமாக தீ பிடித்ததை தொடர்ந்து ஏர் சீனா விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஹாங்சூவில் இருந்து தென் கொரியாவின் சியோலுக்கு பறந்த CA139 விமானத்தில் இந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், விமானத்தின் கேபினுக்குள் இருக்கும் சேமிப்பு பெட்டியில் தீப்பிழம்புகள் எரிவதையும், விமானத்திற்கு புகை வேகமாக நிரம்புவதையும் பார்க்க முடிகிறது.
உறுதிப்படுத்திய ஏர் சீனா
இந்த அவசர நிலை சம்பவத்தை ஏர் சீனா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் விமானத்திற்குள் ஏற்பட்ட இந்த எதிர்பாராத சூழ்நிலையை விமான பணியாளர் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |