வெடிபொருட்களுடன் நாடொன்றின் எல்லைக்குள் நுழைந்த ட்ரோன்: ரஷ்ய ட்ரோன் என அச்சம்
வெடிபொருட்களுடன் தன் நாட்டின் எல்லைக்குள் ட்ரோன் ஒன்று நுழைந்ததையடுத்து, நேட்டோ அமைப்பின் உதவியை நாடியுள்ளது நாடொன்று.
வெடிபொருட்களுடன் எல்லைக்குள் நுழைந்த ட்ரோன்
கடந்த திங்கட்கிழமையன்று, லிதுவேனியா நாட்டில் எல்லைக்குள், பெலாரஸ் நாட்டிலிருந்து 2 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களுடன் வந்த ட்ரோன் ஒன்று நுழைந்துள்ளது.
ஆனால், அதைக் கண்டுபிடிக்க லிதுவேனியாவுக்கு ஒரு வாரம் ஆகியுள்ளது.
ராணுவப் பயிற்சி நடைபெறும் ஓரிடத்தில் அந்த ட்ரோன் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
அது ரஷ்ய ட்ரோனாக இருக்கலாம் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி அனுப்பப்பட்ட அந்த ட்ரோன், தவறுதலாக லிதுவேனியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
என்றாலும், உக்ரைன் மீதான வான்வழித்தாக்குதல்கள் மும்முரமாகிவரும் நிலையில், நேட்டோ நாடுகளின் கிழக்கு எல்லையில் இத்தகைய அபாயங்கள் அதிகரித்துவருகின்றன.
ஆகவே, லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சரான Dovilė Šakalienėம், வெளியுறவு அமைச்சரான Kęstutis Budrysம், நேட்டோ பொதுச்செயலரான Mark Rutteக்கு உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.
இத்தகைய வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் படைகளை அனுப்புமாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்கள்.
இது லிதுவேனிய வான்வெளிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மட்டும் அல்ல என்று கூறும் Budrys, இது மொத்த நேட்டோ வான்வெளிக்கும், நேட்டோ பாதுகாப்புக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்கிறார்.
லிதுவேனியாவுக்குள் இப்படி ட்ரோன் ஒன்று நுழைவது இது முதல்முறையல்ல.
ஏற்கனவே ஜூலை மாதம் 10ஆம் திகதி பெலாரஸிலிருந்து லிதுவேனியாவுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன் ஒன்று லிதுவேனிய எல்லைக்குள் விழுந்து வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |