உக்ரேனிய மக்களின் உயிர் புடின் கைகளில் உள்ளது! மரியுபோல் மேயர் கவலை
மரியுபோல் நகரில் சிக்கியுள்ள் உக்ரேனிய மக்களின் உயிர் புடின் கைகளில் உளள்தாக அந்நகர மேயர் Vadym Boychenko தெரிவித்துள்ளார்.
போரின் தொடக்கத்திலிருந்து மரியுபோலில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் விகிதத்தில் Boychenko தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
தனியர் ஊடகம் நேர்காணில் Vadym Boychenko கூறியதாவது, ரஷ்யா இந்த வெளியேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
மும்பை போட்டிக்கு பிறகு தோனியிடம் தலை குனிந்த ஜடேஜா! வைரலாகும் வீடியோ
வெளியேற்றம் எங்கிருந்து தொடங்கும் என்பதற்கான வரைபடத்தைக் கொடுக்கும்படி அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், நாங்கள் அவர்களுக்கு வரைபடத்தைக் கொடுத்தோம்.
எங்களிடம் எத்தனை பேருந்துகள் இருக்கிறது என கேட்டார்கள், பேருந்துகளின் எண்ணிக்கையைக் கொடுத்தோம்.
வெளியேற்றம் குறித்து நாங்கள் வரைபடத்தில் காட்டிய இடங்கள் அனைத்தையும் அவர்கள் அழித்தார்கள் மற்றும் இடித்தார்கள், எங்கள் பேருந்துகளை அழித்தார்கள்.
இன்னும் 1 லட்ச மக்கள் மரியுபோல் நகருக்குள் சிக்கியிருக்கின்றனர் மற்றும் எஃகு ஆலையில் இருக்கும் உக்ரேனிய வீரர்கள் சரணடையமாட்டார்கள்.
இன்னும் அங்கு பல உயிர்கள் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், அவை புடின் என்ற ஒரே ஒரு நபரின் கைகளில் தான் உள்ளன என Vadym Boychenko தெரிவித்துள்ளார்.