உலகின் இளம் பெண் பில்லியனர் இவர் தான்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
உலகின் இளைய வயது பெண் பில்லியனர் பட்டத்தை தற்போது லிவியா வொய்ட் (Livia Voigt) பெற்றுள்ளார்.
அவரது சொத்து பெரும்பாலும் தனது குடும்ப பாரம்பரியமான பிரேசிலின் முன்னணி தொழிற்சாலையான WEG நிறுவனத்துடன் தொடர்புடையது.
2004-ஆம் ஆண்டு பிறந்த லிவியா, தற்போது 20 வயதிலேயே 1.2 பில்லியன் டொலர் மதிப்புடைய செல்வத்தை பெற்றிருக்கிறார்.
WEG நிறுவனம் மின் மோட்டார்கள், ஆட்டோமேஷன் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பங்களில் உலக அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் அவரது தாத்தா வர்னர் ரிக்கார்டோ வொய்ட் மற்றும் மற்றொரு கூட்டாளிகள் இணைந்து 1961-ல் தொடங்கப்பட்டது.
மற்ற இளம் பணக்காரர்களைப் போல அல்லாமல், லிவியா வொய்ட் மிகுந்த தனிமையை விரும்புகிறார். சமூக ஊடகங்களில் காணமுடியாத இவர், தற்போதும் உளவியல் படிப்பை தொடர்கிறார்.
தனது சொத்துக்களை வளர்த்தல் மற்றும் குடும்பத்தின் பாரம்பரியத்தை பேணுதல் என்பது இவரது முக்கிய பொறுப்பாக உள்ளது.
WEG நிறுவனம் தற்போது பசுமை தொழில்நுட்பங்களில் முதலிடம் வகிக்கிறது, மற்றும் 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 40 பில்லியன் டொலரை கடந்துள்ளது.
இளம் வயதில் இந்த அளவிற்குச் செல்வத்தை அடைந்தாலும், லிவியா வொய்ட் தன்னுடைய பண்பாட்டு பாரம்பரியத்தையும், எதிர்கால பொறுப்புகளையும் மதித்து செயல்படுகிறார்.
அவரது பயணம் இன்னும் துவக்க நிலையிலேயே இருக்க, எதிர்காலத்தில் அவர் எவ்வாறு இந்த பெரும் பேரரசை வழிநடத்துவார் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Livia Voigt, Youngest female billionaire 2025, Livia Voigt net worth, WEG Industries heir, Brazil richest young billionaire, Young billionaires in the world, WEG S.A. Livia Voigt, Female billionaires under 30, Livia Voigt biography, Richest heiresses in the world