வெளிநாடுகளில் வாழ்ந்தவண்ணம் அரசு உதவி பெறுவோருக்கு சிக்கல்: பிரான்ஸ் முடிவு
பிரான்ஸ் நாடு தன் குடிமக்களுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது. ஆனால், பிரான்ஸ் நாட்டவர்கள் பலர், வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, பிரான்ஸ் அரசின் உதவி பெற்றுவருவது தெரியவந்துள்ளது.
ஆகவே, அத்தகையோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை பிரான்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
இது குறித்து பேசிய பிரான்ஸ் பொதுத்துறை அமைச்சரான Gabriel Attal, இனி பிரான்ஸ் நாட்டின் அரசு உதவி பெறுவோர் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Photo by Philippe LOPEZ / AFP
அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்றோர் வெளிநாடுகளில் வாழும் பட்சத்தில், அவர்கள் மரணமடைந்த பின்பும் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி யாரேனும் மோசடி செய்வதைத் தவிர்ப்பதற்காக சோதனைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுவருவதாக Attal தெரிவித்தார்.
சலுகைகளை பெறுவோர் பிரான்சில் வாழும் காலகட்டம் அதிகரிப்பு
அத்துடன், நிதி நிலைமையில் கஷ்டப்படுவோருக்கு அரசு அளிக்கும் சிலவகை அரசு உதவி பெறுவோர், பிரான்சில் ஆண்டொன்றிற்கு ஆறு ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும் என்னும் தற்போதைய விதி மாற்றப்பட்டு, இனி சலுகை வேண்டுமானால் அவர்கள் ஆண்டுக்கு ஒன்பது ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்தாக வேண்டும் என விதி கொண்டுவரப்பட உள்ளது.
அதேபோல, வேலையில்லாதவர்களுக்கு அரசு அளிக்கும் உதவியைப் பெறுவோர், பிரான்சில் ஆண்டொன்றிற்கு எட்டு ஆண்டுகள் வாழ்ந்தாகவேண்டும் என்னும் தற்போதைய விதி மாற்றப்பட்டு, இனி சலுகை வேண்டுமானால் அவர்கள் ஆண்டுக்கு ஒன்பது ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்தாகவேண்டும் என விதி கொண்டுவரப்பட உள்ளது.
இந்த விதிமாற்றங்கள் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன?
ஜூலை 1ஆம் திகதி முதல், சமூகப் பாதுகாப்பு நிதியுதவித் தொகை (social security payments) ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள வெளிநாட்டு வங்கிகளில் செலுத்தப்படமாட்டாது. ஆனால், இந்த மாற்றம் பிரான்ஸ் ஓய்வூதியங்கள் பெறுவோருக்கு பொருந்தாது.
அத்துடன், 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல், யாராவது மோசடி செய்து அரசு உதவி பெறுவது தெரியவந்தால், அவர்கள் பெரும்தொகை அபராதம் செலுத்தவேண்டிவரும் என்றும் பிரான்ஸ் பொதுத்துறை அமைச்சரான Gabriel Attal தெரிவித்துள்ளார்.