விரைவில் ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்வு: ஜோதிடக்கலைஞரின் எச்சரிக்கை
கோவிட் முதல் மகாராணி எலிசபெத்தின் மரணம் வரை துல்லியமாகக் கணித்ததால் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் சலோமே (38), விரைவில் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் முக்கிய விடயம் ஒன்று நிகழவிருப்பதாக எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
விரைவில் ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்வு
அது, ராஜகுடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல் நலம் சார்ந்த விடயமாக இருக்கலாம் என்றும், அது 2025 இறுதிக்கும் 2026இன் ஆரம்ப சில மாதங்களுக்குள்ளும் நடைபெறும் என்றும் சலோமே தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நிகழ்வால், பிரித்தானிய இளவரசரான ஹரிக்கும் மன்னர் சார்லசுக்கும் ஒரு தற்காலிக சமரசம் நடக்கும் என்றும் கூறியுள்ளார் சலோமே.
அத்துடன், அடையாள ரீதியில் ஹரி பிரித்தானியா திரும்புவதற்கும், இளவரசி யூஜீனியுடன் சமரசம் செய்துகொள்வதற்கும் அந்த விடயம் உதவும் என்றும் தெரிவித்துள்ளார் சலோமே.

என்றாலும், வில்லியம் குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையில் இப்போதைக்கு சமரசம் கிடையாது என்றும், அது அடுத்த தலைமுறையினரால்தான் ஏற்படும் என்றும், அதுவும் இப்போதைக்கு அல்ல, அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் சலோமே.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |