புடினின் கனவை தடுக்க...நோட்டோ தரத்தில் உக்ரைன், மால்டோவா ராணுவம்: பிரித்தானிய அறிவிப்பு
ரஷ்ய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா-வின் ராணுவத்தையும் நோட்டோவின் ராணுவ தரத்திற்கு உயர்த்த வேண்டும் என பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது 87வது நாளாக நடைப்பெற்று வரும் சூழலில், அந்த நாட்டின் கிழக்குப் பகுதி நகரங்களான மரியுபோல் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை ரஷ்ய தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், The Telegraph பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ், மிகப்பரந்த ரஷ்யாவை உருவாக்க வேண்டும் என்ற தனது கனவு குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தெளிவாக இருப்பதாகவும், இந்த வாய்ப்பு குறித்து பிரித்தானிய அதன் கூட்டாளிகளுடன் விவாதித்து வருவதாவும் தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்யா தற்போது கைப்பற்ற தவறியதால் புடின் தனது கனவை இனி செயல்படுத்த மாட்டார் என்ற எண்ணம் இல்லை, ஆனால் அதற்குள் உக்ரைன் தன்னைத் தானே நிரந்திரமாக தற்காத்து கொள்ளும் முறையை உறுதிபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் ராணுவத்தை நோட்டோ தரத்திற்கு உயர்த்துவது தொடர்பாக உக்ரைன் மற்றும் போலந்துடன் இணைந்த குழு ஒன்றின் முலம் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா-விற்கும் ஆயுதங்களை வழங்கி நோட்டோ தரத்திற்கு மால்டோவா ராணுவத்தையும் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பொருளாதார தடைகளை நீக்கினால்...உணவு ஏற்றுமதிக்கு துறைமுகங்கள் திறக்கப்படும்: ரஷ்யா அறிவிப்பு
மேலும் இது தொடர்பாகவும் பிரித்தானியா அதன் கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் தனது பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.