தொடர்ந்து கடும் பின்னடைவை சந்திக்கும் மாநில தலைவர் அண்ணாமலை - வெற்றியை ஈட்டும் சாத்தியம் உண்டா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவு
ஏழுக்கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வெளியிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருக்கிறது.
அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தலான இந்த லோக்சபா தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாகும்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையம் அப்டேட் செய்யாமல் இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு செல்வாக்குள்ள பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |