உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஆறு வாரங்கள் வாக்களித்த பிறகு, இந்தியா இன்று முடிவுகளை வெளியிடவுள்ளது.
குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளதோடு இதற்கான முடிவுகள் இன்று வெளியாகவுள்ளமையால் உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில தேர்தல்களுக்கான வாக்குகள் ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பொதுத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி இறுதி வாக்குகள் வரை எண்ணப்படும்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது.
அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டின் நிலவரப்படி,
- திமுக கூட்டணி - 40
- அதிமுக கூட்டணி - 00
- பாஜக கூட்டணி - 00
- நாதக - 00
- மற்றவை - 00
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலை! |
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். |
பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். |
காலை 09.40 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை.
|
ராமநாதபுரம் தொகுதியில் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு.
|
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
|
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் களமிறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.
|
தருமபுரியில் பா.ஜ.க. கூட்டணியில் களமிறங்கியுள்ள பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.
|
காலை10.00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை.
|
திருநெல்வேலியில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை.
|
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 11,133 முன்னிலை
|
காலை 10.15 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
சுற்று 4 - தூத்துக்குடி தொகுயில் கனிமொழி முன்னிலை
|
கடலூர் பாராளுமன்ற தொகுதியின் முதல் சுற்று அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை.
|
வேலூரில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
|
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 97,994 வாக்குகள் பெற்று முன்னிலை
|
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 20,760 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
|
தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை
|
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை
|
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை
|
காலை10.40 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை
|
நெல்லையில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் வேட்பாளர் 3-வது இடம் பிடித்துள்ளார்.
|
காலை 10.30 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
|
வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தெரிவு செய்ய வேண்டுமென அவர்கள் முடிவு செய்வார்கள் என திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார்
|
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மின்னணு வாக்கு எண்ணிக்கையில், 14 ம் எண் மேசையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் "இன்வேலிட் எரர்" என்று காண்பிப்பதால் முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
|
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை
|
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு |
காலை 11 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
|
சேலம் நாடாளுமன்ற தொகுதி இரண்டாம் சுற்று நிலவரப்படி, மொத்தம் 9245 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி முன்னிலை பெற்றுள்ளார்.
|
சிபிஎம் சு.வெங்கடேசன் 2ஆம்சுற்று முடிவில் 18,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
|
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 1,12,365 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
|
அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தொடர்ந்து பின்னடைவு
|
காலை 11:15 மணி நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை..
|
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 2 சுற்றுகள் நிறைவில் 16,854 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை.
|
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 63,261 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
|
தூத்துக்குடி தொகுதியில் 1 லட்சம் வாக்குகளை கடந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
|
காலை 11.30 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
காலை 11.30 மணி தமிழ்நாடு நிலவரம் - திமுக கூட்டணி முன்னிலை
|
காலை 11.45 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 63,261 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
|
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் 5 சுற்றுகள் நிறைவில் 83,178 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு முன்னிலை.
|
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
|
நண்பகல் 12 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 16,622 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
|
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
|
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் பூத் எண் 81-ல் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஒரு வாக்கு கூட பெறவில்லை!
|
பகல் 12:20 நிலவரப்படி அதிமுக 3 தொகுதிகளில் 4வது இடம்.. 7 தொகுதிகளில் 3வது இடம்
|
பகல் 12.45 நிலவரப்படி பாஜக முன்னிலை
|
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசனை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தேவதாஸ் ராமசாமி 383 வாக்குகள் குறைவாக பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்
|
பிற்பகல் 1 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்
|
மதியம் 1 மணி நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை
|
திருச்சூர் 69,000, திருவனந்தபுரம் 16,000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னிலை
|
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீண்டும் முன்னிலை: விஜயபிரபாகரன் பின்னடைவு
|
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி
|
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 2,03,708 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
|
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
|
திமுக 38... மாலை 4 மணிக்கு தொண்டர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் |
பிற்பகல் 2 மணி நிலவரம் - பாஜக முன்னிலை
|
விருதுநகர் மக்களவைத் தொகுதி - காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் முன்னிலை
|
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
|
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
|
மதியம் 2:15 மணி நிலவரம் - தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை.
|
நெல்லை மக்களவைத் தொகுதியில் 974 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு
|
காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் முன்னிலை
|
பிற்பகல் 2.40 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
|
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை
|
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதியானது
|
சிவகங்கை மக்களவை தொகுதியில் 91,081 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்ரபம் முன்னிலை!
|
பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி பாஜக முன்னிலை
|
சொந்த தொகுதியிலேயே சரிவை சந்தித்த பாஜக வேட்பாளர் நமச்சிவாயம்!
|
மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி
|
மதியம் 3:25 மணி நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40/40 திமுக முன்னிலை
|
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி
|
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி முகம்!
|
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் 11 சுற்றுகள் நிறைவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை
|
தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி
|
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 25,567வாக்குகள் முன்னிலை
|
பிற்பகல் 4.30 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
|
தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி!
|
தென்காசி மக்களவைத் தொகுதியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து 7வது முறையாக போட்டியிட்டு தோல்வி
|
மாலை 4.50 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
|
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை!
|
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் மீண்டும் வெற்றி
|
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,38,364 வாக்குகள் முன்னிலை
|
மாலை 05.15 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
|
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி
|
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிப்பு
|
திமுகவை எதிர்த்து போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி
|
தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
|
பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி!
|
தருமபுரியில் திமுக வெற்றி
|
வெற்றி முகத்தில் திமுக - மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!
|
கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் வெற்றி
|
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி
|
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தோல்வி அடைந்துள்ளார்.
|
விருதுநகர் மக்களவைத் தொகுதி 16 சுற்றுகள் முடிவில் மாணிக்கம் தாக்கூர் முன்னிலை
|
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் தோல்வி
|
திருவள்ளூரை கைப்பற்றிய காங்கிரஸ்
|
தருமபுரியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற திமுக வேட்பாளர் ஆ. மணி
|
நீலகிரி தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் ஆ.ராசா
|
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
|