உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த தேர்தல்! இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது.
இந்திய மக்களவைத் தேர்தல் 2024
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்தலானது நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறை ஆட்சியை கைப்பற்றியது. தற்போது 2024 இந்திய மக்களவைத் தேர்தலுக்கான செலவு சுமார் ரூ.1.35 லட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த தேர்தல் தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. அதுவும் இதன் பாதி செலவை பாஜக கட்சி செய்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரூ.1.35 லட்சம் கோடி
இந்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான செலவு ரூ.1.35 லட்சம் கோடி இருக்கும் என்றும், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த Open Secrets என்ற அமைப்பு தெரிவித்தது.
இந்தியாவில் 96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒரு வாக்காளருக்கு ரூ.1400 செலவு செய்வதாக கூறப்படுகிறது.
2019 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான செலவு 60 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையில் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக இந்திய தேர்தல் தொடர்பான செலவுகளை Center for Media Studies என்ற தொண்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.
இதன் ஊடக ஆய்வு மையத்தின் தலைவர் பாஸ்கர் ராவ், 2024 மக்களவை தேர்தலுக்கான செலவு ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணித்திருந்தார். மேலும், தேர்தலுக்கான அதிக தொகையை பாஜக செலவிட்டு இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |