இயக்குநர் தங்கர் பச்சானை களமிறக்கும் பாமக.., அன்புமணி போட்டியிடாதது அரசியல் யுக்தியா?
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமகவின் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்மையில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்நிலையில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்ப்ட்டுள்ளனர். அதில், பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
ஆனால், தருமபுரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் இல்லை. இதனால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - இயக்குநர் தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்