பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
மோடி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
குறித்த தேர்தலின் இறுதி முடிவானது இன்று வெளியாகவுள்ளது. அதற்கான நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மை 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் அதற்கான இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி வருகிறார்.
பிரதமர் பதவியிலிருந்து மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாஜக 400 இடங்களை வெல்லும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 300 இடங்களை கூட பாஜகவால் வெல்லமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |