மக்களவை தேர்தல் 2024: அதிக வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் யார்?
அதிக மக்கள் தொகையை கொண்ட இந்திய நாட்டின் 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
குறித்து தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு வெளியிடடும் நடவடிக்கை நேற்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தேர்தல் முடிவானது ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உற்று நோக்கி பார்க்க வைத்தது. காரணம், இது இந்தியா கூட்டணி மற்றும் ஆளும் பாஜக அரசுக்கு இடையேயான தேர்தலாக மட்டுமன்றி, ஜனநாயகம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தேர்தலாக பார்க்கப்பட்டது.
பாஜக கட்சியானது பிற கட்சியின் கூட்டணியுடன் மொத்தம் 12 தொகுதிகளில் நின்றது. பாஜக இன் மாநில தலைவரான அண்ணாமலை தனது கட்சி வெற்றி பெறும் என கூறனார். ஆனால் அதற்கு மாறாக பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனது.
திமுக-இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளில் நின்றது. புதுச்சேரி உள்பட, நாற்பது தொகுதிகளிலும் திமுக-இந்தியா கூட்டணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்கள்
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட சச்சிதானந்தம் 4,43,821 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருடைய மொத்த வாக்கு எண்ணிக்கை 6,70,149 ஆகும்.
ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 4,42,009 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருடைய மொத்த வாக்கு எண்ணிக்கை 7,58,611 ஆகும்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருடைய மொத்த வாக்கு எண்ணிக்கை 5,40,729 ஆகும்.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட அருண் நேரு 3,89,107 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருடைய மொத்த வாக்கு எண்ணிக்கை 6,03,209 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |