543 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
ஏப்ரல் மாதம் 19ம் திகதி தொடங்கிய தேர்தல், ஏழு கட்டங்களாக யூன் 1ம் திகதி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மஞ்சு சர்மா 8,86,850 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
|
வாரணாசியில் பாஜக வேட்பாளர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
|
அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி.
|
குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்ட அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
|
இன்று மாலை 5.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
|
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
|
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் எச்.டி.குமாரசாமி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
|
திருவனந்தபுரத்தில் சசி தரூர் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
|
ஆந்திராவின் முதலமைச்சராக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார் சந்திரபாபுநாயுடு.
|
மத்தியபிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,89,566 வாக்குகளை பெற்று நோட்டோ இரண்டாம் இடம்பிடித்துள்ளது
|
டெல்லியில் உள்ள 7 அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது
|
தமிழகத்தில் முதன்முறையாக பாஜக 10 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது
|
மக்களவை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 8-10 தொகுதிகளில் முன்னிலை பெற்று வாக்குவிகிதத்தில் சற்று முன்னேறி இருக்கிறது
|
1 மணி நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலா 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
|
பீகாரில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 05 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது
|
543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். ஆளும் பாஜக, இண்டியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் பட்சத்தில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம்
|
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது முன்னணியிலுள்ள 280 தொகுதிகளில் சுமார் 107 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1000 வாக்குகளுக்கும் கீழே உள்ளது
|
அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் முன்னிலை
|
இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
|
நாகலாந்தின் ஒரே மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
|
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை
|
ஆந்திரப் பிரதேசம் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிப்பதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
|
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
|
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா 3, 17, 083 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
|
ஒடிசா நிலவரம்
பிஜீ ஜனதா தளம்- 50, பாஜக- 73, காங்கிரஸ்- 12, மற்றவை- 3
|
மக்களின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், என்றென்றும் மக்களுக்காக சேவை செய்வேன்- தமிழிசை சௌந்தரராஜன்
|
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
|
மேற்குவங்க நிலவரம்
திரிணாமுல் காங்கிரஸ்- 21, பாஜக- 11, காங்கிரஸ்- 2, மார்க்சிஸ்ட் கம்யூ- 1
|
டெல்லியில் பாஜக 6 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது
|
ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 5640 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
|
தமிழக நிலவரம்
திமுக- 14, காங்கிரஸ்- 7, விடுதலை சிறுத்தைகள்- 2, மார்க்சிஸ்ட் கம்யூ- 2, பாமக- 1, அதிமுக- 1
|
தெலுங்கானா தொகுதி - 17
காங்கிரஸ்- 08, பாரத் இராட்டிர சமிதி- 01, பாஜக- 07, எஐஎம்ஐஎம்- 01
|
உத்தரபிரதேசத்தின் அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார், இவரை விட காங்கிரஸ் வேட்பாளரான கிஷோரி லால் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
|
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை
|
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு
|
உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 45 தொகுதிகளில் முன்னிலை.
|
முதல் சுற்று முடிவில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். அடுத்ததாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
|
தபால் வாக்குகள் எண்ணப்படும் வரும் நிலையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும், 100க்கும் அதிகமான தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் முன்னிலையில் இருக்கிறது.
|
இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை
|
மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
|
சூரத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பாஜக வெற்றி கணக்குடன் தொடங்கியுள்ளது.
|
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
|
தற்போதைய நிலவரம்:- தேசிய ஜனநாயக கூட்டணி 201 இடங்களிலும் இந்தியா கூட்டணி 114 இடங்களிலும், மற்றவை 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
|