லண்டன் மாரத்தான் போட்டியில் அரங்கேறிய சோகம்: வெற்றி இலக்கிற்கு அருகில் சுருண்டு விழுந்த நபர்
36 வயது மதிக்கத்தக்க நபர் லண்டன் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
உயிரிழப்புக்கான காரணம் மருத்துவ நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்படும் என அறிவிப்பு.
பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
40,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட லண்டன் மாரத்தான் போட்டி, சுமார் 26.2 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் தென்கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வெற்றி இலக்குக்கு 3 மைல்களுக்கும் குறைவான தூரம் இருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
PA
இது தொடர்பாக மாரத்தான் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள தகவலில், போட்டி தொடங்கிய 23 மைல் முதல் 24 மைல்களுக்கு இடைப்பட்ட தொலைவில் மயங்கி விழுந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் மருத்துவ நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பம் அவருடைய விவரங்களை தனியுரிமையுடன் வைக்க விரும்பியதால் உயிரிழந்தவரின் விவரங்கள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மாரத்தான் போட்டி நிர்வாகம் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்-க்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்: புகைப்படம்
உயரடுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி நன்கொடைக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.