பிரித்தானியர் ஒருவரால் பல பில்லியன் டொலர் சம்பாதிக்கும் ஈரான் அரசாங்கம்
ஈரானிய அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டொலர்களை ஈட்ட பிரித்தானியர் ஒருவரின் எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
குறித்த நிறுவனமானது பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்காவால் குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த அர்ஷியா ஜஹான்பூர் என்பவர் மீதே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு முன்னணி நிறுவனத்தை இவர் வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட எண்ணெய் நிறுவனமான அலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல் (API) நிறுவனத்திடமிருந்து 123 மில்லியன் பவுண்டுகள் தொகையைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நேர்மையற்ற முறையில் அனுமதித்ததாக தொழிலதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அர்ஷியா ஜஹான்பூர் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களில், மெஹர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் 60 சதவீதத்தை அலையன்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அரசு எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் இந்த மெஹர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டு அமெரிக்கா தடை விதித்திருந்தது.
ஈரான் பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல்களின் விற்பனையை ஒருங்கிணைக்க மெஹர் பெட்ரோ கெமிக்கல் போன்ற பல நிறுவனங்கள் வழிவகுக்கிறது என்றே அமெரிக்க கருவூலத் துறை கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில், Alliance நிறுவனம் மெஹர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு 170 மில்லியன் டொலர் பாக்கி செலுத்த வேண்டும் என்று ஒரு ஈரானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இரு தரப்பினரும், மற்றவர் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிறுவனத்தில் செல்வாக்கு
இந்த நிலையில் Alliance நிறுவனத்தின் கணக்குகளிலிருந்து பணம் எவ்வாறு வெளியேற்றப்பட்டது மற்றும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த சிக்கலான சர்வதேச சட்டப் பூசலில், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு மிகச் சமீபத்திய நடவடிக்கையாகும்.
இதனிடையே Viaro எரிசக்தி நிறுவனத்தின் உரிமையாளரான Francesco Mazzagatti என்பவர் Alliance நிறுவனத்திடம் இருந்து 123 மில்லியன் பவுண்டுகள் தொகையை திருவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2020ல் Alliance நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து Mazzagatti விலகியதன் பின்னரும் நிறுவனத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தார் என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில், Alliance நிறுவனம் அல்லது மெஹர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்றே ஜஹான்பூரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |