லண்டனில் தாலிபான்களை எதிர்த்து மக்கள் போராட்டம்! இன்னும் மாறவில்லை என வேதனை
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், காபூலில் தாலிபான்களின் புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆயிரக்கணக்கானோர் சாலையில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி கொடூர ஆட்சி செய்து வருகின்றனர்.
இதையடுத்து பிரித்தானியாவின் லண்டன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தாலிபான்களை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த முறை அவர்களது ஆட்சி காலத்தில் பெண்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று வீட்டுக்குள்ளையே அடைத்து வைத்தனர். பெண் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை மற்றும் இஸ்லாம் மதத்தை நிராகரித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.
ஆனால் இந்த ஆட்சியில் பெண்கள் ஊடகம் தவிர அனைத்து வேலைக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியவில்லை என்றால் அவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொலை செய்கின்றனர்.
பல ஆப்கானியர்கள் மற்றும் லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உட்பட தாலிபான்களின் கறுப்புபட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த சூழலில் அவர்கள் கொடுத்த உத்தரவாதங்கள் மீது மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து லண்டன் மக்கள் கையில் சிவப்பு, பச்சை கொடிகளை ஏந்தியும் தாலிபான்கள் இன்னும் மாறவில்லை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்து என்று பயங்கரவாத இனத்திற்கு எதிராக பொறிக்கப்பட்ட வசனங்கள் கொண்டு சாலையில் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.