3 நிமிடத்தில் 1,800 மீட்டர் சரிந்த சிங்கப்பூர் விமானம்! 3 இந்தியர்கள் உள்பட பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சிங்கப்பூர் விமான நிறுவன விமானத்தில் பயங்கர அதிர்வு ஏற்பட்டதில் 3 இந்தியர்கள் உட்பட பயணிகள் காயம் சிலர் காயமடைந்துள்ளனர்.
விமானத்தில் அதிர்வு
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் நடுவானில் கடுமையான அதிர்வுகளை சந்தித்தது.
மேலும் வெறும் 3 நிமிடத்தில் விமானம் 1,800 மீட்டர் கீழே இறங்கியதாக விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
Londra'dan Singapur'a giden bir Singapur Havayolları Boeing 777-300ER uçağının şiddetli türbülansa girmesi sonucu bir kişi öldü, onlarca kişi yaralandı. pic.twitter.com/epGkebTDyv
— Milena (@josephineVV5) May 22, 2024
இதன் காரணமாக பல பயணிகள் காயமடைந்தனர். அத்துடன், 73 வயதான பிரித்தானிய நபர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பயணிகள் காயம்
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களைக் கொண்ட போயிங் 777 விமானம், இந்தியப் பெருங்கடலின் மேல் பகுதியில் இந்த அதிர்வுகளை சந்தித்துள்ளது.
இதனை தொடர்ந்து விமானம் அவசர அவசரமாக தாய்லாந்தின் பாங்காக் நகரில் அவசர தரையிரக்கம் செய்ததது.
விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர்கள் காத்திருந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் மூன்று பேர் இந்திய பயணிகள். அவர்களின் காயங்களின் தீவிரம் குறித்த தகவல்கள் இல்லை.
— FL360aero (@fl360aero) May 21, 2024
விமான நிறுவனம் உதவி
உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு இரங்கல்களையும், விமானத்தில் இருந்த அனைவருக்கும் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு வருத்தத்தையும் சிங்கப்பூர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |