லண்டன் சாலையில் பாதசாரிகள் மீது மோதிய இரட்டை அடுக்கு பேருந்து: 17 பேர் படுகாயம்!
லண்டனின் விக்டோரியா தெருவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பாதசாரிகள் வரை காயமடைந்துள்ளனர்.
லண்டனில் பேருந்து விபத்து
வியாழக்கிழமை காலை லண்டனின் விக்டோரியா தெருவில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானதில் 17 பாதசாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரட்டை பேருந்து, காலை 8.20 மணி அளவில் விக்டோரியா தெருவில் Route 24 என்ற நடைபாதை மீது ஏறி பாதசாரிகளை மோதியது.
லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், உயிருக்கு ஆபத்தான காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், பேருந்து கண்ணாடி உடைந்து முன்பகுதி சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |