முடி கருகருவென்று அடர்த்தியாக காடு போல் வளர இந்த ஒரு எண்ணெய் போதும்...!
பொதுவாகவே பெண்கள் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு தினமும் பல சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.
ஆனால் இவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்கு பதிலாக கூந்தலின் அழகை குறைக்கிறது.
எனவே உங்களுக்கு எப்போதும் கைக் கொடுக்கும் பாட்டி வைத்தியத்தின் முறைப்படி நீங்கள் இந்த முயற்சியை செய்யலாம்.
முடி நீளமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஒரு பாத்திரத்தில் முடியின் நீளத்திற்கு ஏற்ப கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.
அதில் 1 வெங்காயத்தை அரைத்து, அதன் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இந்த இரண்டையும் நன்கு கலந்து,உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை தடவவும்.
தலைமுடியைக் கழுவுவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நீங்கள் நல்ல மாற்றத்தை பெறலாம்.
கடுகு எண்ணெயை முடியில் தடவினால் என்ன நடக்கும்?
கடுகு எண்ணெய் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.
கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்கும், உதிர்வதைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
இது புதிய முடி வளரவும், சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் உதவுகிறது.
வெங்காயச் சாற்றை முடியில் தடவினால் என்ன நடக்கும்?
வெங்காயச் சாற்றில் ஏராளமான கந்தகம் உள்ளது, இது முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.
இதில் சல்பர் இருப்பதால், முடி உதிர்வதைத் தடுக்கிறது.
வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், முடிக்கு ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |