பக்முத் நகரம் வீழ்ந்தால்...மேற்கு நாடுகளிடம் புடின் இதை செய்து விடுவார்: ஜெலென்ஸ்கி கருத்து
போரில் பக்முத் நகரை இழப்பது உக்ரைனை புடினுடன் சமரசம் செய்ய கட்டாயப்படுத்தலாம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பக்முத் நகரம் முற்றுகை
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையில், தற்போது இரு நாட்டு ராணுவ துருப்புகளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
போரில் இரு நாடுகளும் பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பக்முத் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
சில இராணுவ ஆய்வாளர்கள் பக்முத் நகரம் மூலோபாய ரீதியாக முக்கியமற்றது என்று பரிந்துரைத்துள்ள போதிலும், நகரின் தோல்வி விளாடிமிர் புடினுடன் உக்ரைனை சமரசம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தலாம் என்பதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பக்முத் இழப்பு
இந்நிலையில் பக்முத் நகரை இழப்பது என்பது ”எங்கள் நாட்டு மக்களை சோர்வடையச் செய்யும்”, அதே நேரத்தில் ரஷ்யா இந்த வெற்றியை மேற்கு நாடுகளுக்கு, அவரது சமூகத்திற்கு, சீனாவுக்கு, ஈரானுக்கு விற்க உதவிகரமாக மாறிவிடும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
If #Bakhmut fell to #Russian forces, #Putin, would “sell this victory to the West, to his society, to China, to Iran,” President #Zelenskyy said in an interview with AP. pic.twitter.com/XYlRur8bsO
— NEXTA (@nexta_tv) March 29, 2023
உக்ரைனிய பகுதிகளின் இழப்பு ஆயுதப் படைகளின் தாக்குதல் வேகத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
மேலும் எங்களது சமூகம் சோர்வாக உணர்ந்தால், அவர்களிடம் சமரசம் செய்ய எங்கள் சமூகமே என்னை அழுத்தும் என்றும் ஜெலென்ஸ்கி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.