அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம்
அமேசான் காட்டில் தொலைந்துபோன பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 25 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிரேசிலிய பழங்குடியின சிறுவர்கள் 25 நாட்கள் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளனர், அங்கு அவர்கள் பழம் சாப்பிட்டு, மழைநீரைக் குடித்து உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 15 செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்ட சகோதரர்களான 7 வயது Glauco மற்றும் 9 வயது Gleison, அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் பசி மற்றும் நீர்மமற்ற நிலையில் இருந்தனர், மற்றபடி நன்றாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் உடல் எடை அதிகரித்துள்ளது, அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று வடக்கு நகரமான மனாஸில் உள்ள உள்நாட்டு சுகாதார அதிகாரி Januario Carneiro da Cunha Neto கூறினார்.
PC: ©Screenshot by Informativos Telecinco
பழங்குடியின முரா (Indigenous Mura) குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் பிப்ரவரி 18 அன்று, Amazonas மாநிலத்தில் உள்ள Manicore கிராமப்புற கவுண்டியில் உள்ள தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, பறவைகளை வேட்டையாட அடர்ந்த மழைக்காடுகளுக்குள் நுழைந்தபோது காணாமல் போனார்கள்.
காட்டுக்குள் சிக்கித்தவித்த அவர்கள் மழைநீர், ஏரி நீர் மற்றும் சோர்வா பழங்களை (கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உள்ளூர் பழம்) உண்டு கொண்டு உயிர் பிழைத்தனர் என்று Carneiro கூறினார்.
PC: Infobae
ஒரு கட்டத்தில் சிறுவர்களை தேடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர், ஒரு நாள் விறகு சேகரிக்கும் ஒரு குடும்ப நண்பர் தற்செயலாக அவர்களைக் கண்டுபிடித்தனர் என்று Carneiro கூறினார். நடக்க முடியாத அளவுக்கு வலுவிழந்த நிலையில் இருந்த தனது தம்பியை Gleison தன் முதுகில் சுமந்து சென்றதாக அவர் கூறினார்.
சிறுவர்கள் இருவரும் வியாழக்கிழமை மனாஸில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் சில வெட்டுக்கள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக 25 நாட்களாக பாம்புகள் அல்லது பிற வனவிலங்குகளை நெருங்காமல் இருவரும் தவிர்த்துவந்துள்ளனர் என்று Carneiro கூறினார்.
PC: ©Screenshot by Informativos Telecinco
PC: Junio MATOS AFP
உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ