லொட்டரியில் 560,000 பவுண்ட்கள் வெற்றி: தங்க ஆண்குறி கடவுளுக்கு நன்றி கூறும் தம்பதி
தாய்லாந்தில் 560,000 பவுண்ட்கள் மதிப்புள்ள லொட்டரியை வெற்றி பெற்ற தம்பதி, தங்கள் தங்க ஆண்குறி கடவுள் சிலைக்கு நன்றி செலுத்தினர்.
தங்க ஆண்குறி கடவுள்
தாய்லாந்தில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வரும் உடோம் கன்முவாங்( Udom Kanmuang) மற்றும் அவரது மனைவி நொய்(Noi) கடந்த மே 16 திகதி 24 மில்லியன் பாட்( 560,000 பவுண்ட்கள்) மதிப்பிலான லொட்டரியை வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து இந்த வெற்றிக்கு தங்களின் நம்பிக்கை தெய்வமான தங்க ஆண்குறி கடவுளே காரணம் என்று அதற்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை ஒன்றை செய்துள்ளனர்.
Daily Star(Supplied)
அத்துடன் அதிர்ஷ்டகரமான அந்த தம்பதி, தங்கள் நம்பிக்கை தெய்வதற்கு மிகப்பெரிய விழா ஒன்றையும் எடுக்க உள்ளனர். இதற்காக ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஹோட்டலின் குளத்தில் உள்ள போர் பு சியான் அனன் நகரத்(Por Pu Sian Anan Nakarat)என்ற தாய்லாந்தின் நாட்டுப்புற தெய்வத்திற்கு காலை 11 மணிக்கு தவறாமல் செய்த வழிபாடே இந்த லொட்டரி பரிசு கிடைக்க முக்கிய காரணம் என தம்பதி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Daily Star(Supplied)
எம்.பி தேர்தலில் தோல்வி
கடந்த சில தினங்களுக்கு முன்பு பியூ தாய் கட்சி சார்பாக எம்.பி தேர்தலில் போட்டியிட்ட ஹோட்டல் உரிமையாளர் உடோம் கன்முவாங் தோல்வியை தழுவி இருந்தார்.
அப்போது தன்னுடைய அதிர்ஷ்டம் தவறி விட்டதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் லொட்டரியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தேர்தலில் பெற்ற தோல்விக்கு ஆறுதலாக இந்த லொட்டரி பரிசை தங்களுடைய நம்பிக்கை தெய்வம் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Daily Star(Supplied)