நிலச்சரிவில் சிக்காமல் மேற்கூரையில் அமர்ந்து குடும்பத்துடன் உயிர் தப்பிய லொட்டரி வியாபாரி
வயநாடு பயங்கர நிலச்சரிவில் சிக்காமல் லொட்டரி வியாபாரி ஒருவர் தனது குடும்பத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், நிலச்சரிவில் சிக்கிய 100 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
லொட்டரி வியாபாரி
நிலச்சரிவில் சிக்காமல் சூரல்மலா கிராமத்தை சேர்ந்த லொட்டரி வியாபாரி பொன்னையன் தனது குடும்பத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறும்போது, "எனது வீட்டின் அருகே இரவில் பெரிய மரம் சாய்ந்தது. உடனே என்னுடைய மனைவி ஜிசா மற்றும் மகன்கள் ஸ்ரீராக், விகாஸ் ஆகியோரை வீட்டை விட்டு வெளியேற்றினேன்.
பின்னர் நாங்கள் எங்களுடைய லொட்டரி கடைக்கு வந்தோம். நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூட மழை பெய்ததால் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்று எனக்கு தோன்றியது.
அப்போது, நான் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினேன். ஆனால், அவர்கள் வெளிவரவில்லை. பின்னர், நள்ளிரவில் கனமழை பெய்தது.
நான் உடனே கடையின் ஷட்டரை திறந்து பார்த்தேன். அப்போது சேற்று நீர் உள்ளே வர ஆரம்பித்தது. பின்னர் ஷட்டரை மூடிவிட்டு கடையின் கூரையின் மீது மனைவி குழந்தைகளுடன் ஏறி அமர்ந்து கொண்டோம்.
அப்போது, அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் பதறினோம்.
உதவிக்காக கத்தினோம். ஆனால், யாரும் வரவில்லை. அதனால் அவர்கள் இறந்துவிட்டனர். நாங்கள் உயரமான இடத்திற்கு சென்றதால் குடும்பத்துடன் தப்பித்தோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |