வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் சின்னம்.., 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலவி வருகிறது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |