வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை உற்று நோக்கி வருவதாகவும் அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |