உடல்நலம் குன்றிய உரிமையாளர்: ஆம்புலன்ஸை விடாமல் துரத்திய நாய்! வைரல் வீடியோ
ஒரு நாய் மற்றும் அதன் உரிமையாளர் இடையேயான வலுவான பிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
நாயின் விசுவாசம்
கொலம்பியாவின் துன்ஜாவில் நடந்த இந்த சம்பவத்தில், டோனோ(Tono) என்ற தீர்மானமான நாய், தனது உடல்நலம் குன்றிய உரிமையாளர் அலெஜாண்ட்ரோவை(Alejandro) சுமந்து செல்லும் ஆம்புலன்ஸைத் துரத்தி சென்றது.
உரிமையாளர் அலெஜாண்ட்ரோவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளியது, இந்த இக்கட்டான நிலையிலும், நாய் டோனோ தனது உரிமையாளரை விட்டு விலக மறுத்தது.
A dog was running after the ambulance that was carrying their owner. When the EMS realized it, he was let in. ❤️ pic.twitter.com/Tn2pniK6GW
— TaraBull (@TaraBull808) September 12, 2024
நாய் டோனோவின் இந்த துரத்தலை அப்பகுதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கவனித்து அதனை கேமராவில் படம் பிடித்தார்.
அத்துடன் அதனை ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் அறிவித்தார். இதையடுத்து நாயின் விசுவாசத்தை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலெஜாண்ட்ரோவுடன் டோனோவையும் அழைத்து சென்றனர்.
வைரலான வீடியோ
சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்ட 27 வினாடிகள் வீடியோ, 12.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சமூக ஊடக பயனாளர்கள் டோனோவின் அர்ப்பணிப்புக்கு தங்கள் பாராட்டை வெளிப்படுத்தினர். "இது உண்மையான விசுவாசம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |