ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி: தட்டித் தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 177
நடப்பு ஐபிஎல் தொடரின் 63வது போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 89 ஓட்டங்கள் விளாசினார். பெஹ்ரென்டோர்ஃப் 2 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@IPL (Twitter)
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் குவித்தது.
@IPL (Twitter)
அதிரடி காட்டிய ரோகித்
கேப்டன் ரோகித் சர்மா 25 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டங்களிலும், நேஹல் வதேரா 16 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். ஆனால் கடைசி பந்தில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணி 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
@IPL (Twitter)
போராடிய டிம் டேவிட்
டிம் டேவிட் 19 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார். லக்னோ அணியின் தரப்பில் பிஷ்னோய் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
@IPL (Twitter)
The big boys bringing it back with a fighting partnership. 🤝 pic.twitter.com/OsNAZIxreO
— Lucknow Super Giants (@LucknowIPL) May 16, 2023
Fought valiantly. Retired unselfishly. 👏👏👏 pic.twitter.com/6StRafOBjv
— Lucknow Super Giants (@LucknowIPL) May 16, 2023