உக்ரைனில் கொல்லப்பட்ட பிரிவினைவாத தளபதி: இழப்பை ஒத்துக்கொண்ட லுஹான்ஸ்க் தலைவர்!
உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவால் சுகந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The "#LPR" separatist commander Mikhail Kyshchyk, better known as "Misha Chechen," was killed in fighting near #Kremenna. His unit was regularly involved in robberies and looting. This was reported by Sergei Kozlov, head of the self-proclaimed "LPR". pic.twitter.com/c9EHN5luor
— NEXTA (@nexta_tv) April 19, 2022
உக்ரைனின் கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யாவால் சுகந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியின் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பிரிவினைவாத ராணுவத்தளபதி மிகைல் கிஷ்சிக் மற்றும் அவரது படைத்துருப்புகள் உக்ரைனில் தாக்குதல் நடத்திய போது தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் மிகைல் கிஷ்சிக் என்ற பெயரை விட மிஷா செச்சென் என்ற பெயரால் நன்கு அறியப்படும் நபர் என தெரியவந்துள்ளது.
கடைசி வீரர் வரை உக்ரைன் போராட வேண்டும்... அமெரிக்கா மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் குற்றசாட்டு!