கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்த பெரிய சொகுசு கப்பல்! போராடி காப்பாற்றப்பட்ட 51 பணியாளர்கள்: வெளியான வீடியோ
கிரீஸின் Corfu தீவில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய சொகுசு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பல் MSC Lirica என கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு கப்பலில் தீ பிடித்துள்ளது.
கப்பலில் காலியான உயிர்காக்கும் படகிலிருந்து தீ எற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது 51 பணியாளர்கள் இருந்ததாக உள்ளூர் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இத்தாலியில் இருந்து மார்ச் 1ம் திகதி Corfu தீவு வந்தடைந்த MSC Lirica கப்பல், கடந்த இரண்டு வாரங்களாக தீவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது
இந்த தீ விபத்தில் கப்பலின் ஒரு பக்கம் மிகவும் சேதமடைந்து்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பயணிகள் யாரும் இல்லாத நிலையில் கப்பலில் இருந்த பணியாளர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.