மனித இனமே ஆபத்தில் ஆழ்ந்துவிடும்! எச்சரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
காடுகளையும், கடல்களையும் பாதுகாக்கவில்லை என்றால் மனித இனமே ஆபத்திற்கு சென்றுவிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
காடுகள் அழிப்பு
காடுகள் அழிப்பினால் உலகம் முழுவதும் வெப்பமயமாதல் தலைதூக்கியுள்ளது. இதனை சரிசெய்ய சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நம் பல்லுயிர்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேக்ரானின் வேண்டுகோள்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பிரான்சில் நமது நிலம் மற்றும் பெருங்கடல்களில் 30 சதவீதம் பாதுகாக்கப்படுகிறது. நமது நாட்டில் 33 சதவீதம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். உலகம் முழுவதும் இதையே செய்வோம்! கோஸ்டாரிகா மற்றும் பிரித்தானியாவுடன் நாங்கள் தொடங்கிய இயற்கை மற்றும் மக்களுக்கான உயர் லட்சியக் கூட்டணியின் ஒரு பகுதியாக, உலகின் 30 சதவீதம் நிலம் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதிபூண்டுள்ளன. மற்ற அனைவருக்கும் நான் கூறுகிறேன்: எங்களுடன் சேருங்கள்!' என தெரிவித்துள்ளார்.
If we do not protect our forests, our oceans, and all the life they support, we will be putting all of humanity at risk. For the sake of our children, we must do everything we can to protect our biodiversity. This is my appeal:
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 17, 2022
மேலும் அவரது மற்றொரு பதிவில், 'நமது காடுகளையும், கடல்களையும் அவை ஆதரிக்கும் அனைத்து உயிர்களையும் நாம் பாதுகாக்கவில்லை என்றால், நாம் மனித இனத்தையே ஆபத்தில் ஆழ்த்துவோம். நம் குழந்தைகளின் நலனுக்காக, நம் பல்லுயிர்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இது எனது வேண்டுகோள்' என தெரிவித்துள்ளார்.
@AP Photo/Armando Franca