பிரான்சின் மிக உயரிய விருதை வழங்கிய மேக்ரான்! அதனை மறுத்து ஜெலென்ஸ்கி கூறிய வார்த்தைகள்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருதினை இமானுவல் மேக்ரான் வழங்கினார்.
உயரிய விருது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானை சந்தித்தார்.
அப்போது, பிரான்சின் உயரிய விருதான ''The Legion of Honor'' விருதை மேக்ரான் அவருக்கு வழங்கினார். ஆனால் ஜெலென்ஸ்கி, இது எனக்கு மிகவும் அதிகம். அதனால் தான் (இந்த விருது) எங்கள் மக்கள் அனைவருக்கும், உக்ரேனியர்களுக்கும், எங்கள் சமூகத்திற்கும் தான் என்று கூறினார்.
மேக்ரான் பதிவு
இதுகுறித்து இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைனுக்கும், அதன் மக்களுக்கும் சமர்ப்பணம். அன்புள்ள வோலோடிமிர், உங்கள் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கும் சமர்ப்பணம்' என குறிப்பிட்டுள்ளார்.
Hommage à l’Ukraine et à son peuple.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 9, 2023
Hommage à toi, cher Volodymyr, pour ton courage et ton engagement. pic.twitter.com/6sN2iVUWrl