ஜேர்மனியைப் போல் நாங்களும் உக்ரைனுக்காக..ஜெலென்ஸ்கியுடன் இணைந்து இமானுவல் மேக்ரான் வெளியிட்ட பதிவு
போரில் ரஷ்யா வெற்றி பெற உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்டினோம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய பயணம்
ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, லண்டனுக்கு சென்றுவிட்டு பின் பாரிஸ் நகரில் ஜனாதிபதி மேக்ரானை சந்தித்தார்.
எலிசீ அரண்மனையில் நடந்த இரவு விருந்தில் மேக்ரான், ஜெலென்ஸ்கி ஆகியோருடன் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-வும் இணைந்துகொண்டார்.
தங்கள் நாட்டிற்கு கூடிய விரைவில் போர் விமானங்களை வழங்குமாறு இரு நாட்டு தலைவர்களிடமும் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
தலைவர்கள் மாநாடு
அதனைத் தொடர்ந்து பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உச்சி மாநாட்டில் மூவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜேர்மனியின் குரலுடன் எங்கள் குரலை சேர்ப்பதன் மூலம் பாரிஸில் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய குடும்பத்துடன் பிரஸ்ஸல்ஸில், போரில் உக்ரைன் வெற்றிபெற உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்டினோம். எங்கள் ஆதரவு குறையாது' என தெரிவித்துள்ளார்.
À Paris en mêlant notre voix à celle de l’Allemagne, et à Bruxelles avec la famille européenne réunie, nous avons marqué notre détermination à aider l’Ukraine à gagner la guerre. Notre soutien ne faiblira pas. pic.twitter.com/IrH9NaIggb
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 10, 2023