வலிமையான நாடுகளின் வரிவிதிப்புகள்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கடும் விமர்சனம்
வலிமையான நாடுகளின் வரிவிதிப்புகள், பிளாக் மெயில் செய்வதற்கு ஒப்பானவை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேக்ரான் கடும் விமர்சனம்
வலிமையான நாடுகளால் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் வர்த்தகத்தை மறுசீரமைக்கும் கருவிகளாக இல்லாமல், பிளாக் மெயிலின் ஒரு வடிவமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், ஜூலை 9 ஆம் தேதிக்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் மேக்ரானின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
என்றாலும், மேக்ரான் அமெரிக்காவையோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையோ குறிப்பிட்டு இந்த விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |