பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த பெண் அமைச்சர் பதவியைப் பறித்த மேக்ரான்: அமைச்சரவையில் மாற்றங்கள்
கலவரங்களால் பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போன நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.
பிரதமர் தொடர்பில் எதிர்பார்ப்பு
கலவரங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரதமரான Elisabeth Borne மாற்றப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேக்ரான் பிரதமர் பதவியில் கைவைக்கவில்லை.
ஆக, Elisabeth Borne பிரதமராக நீடிக்கிறார்.
என்னென்ன மாற்றங்கள்?
முக்கிய மாற்றமாக, பிரான்சின் முதல் கருப்பின கல்வி அமைச்சரான Pap Ndiaye மாற்றப்பட்டு, அவரது கல்வித்துறை அரசின் செய்தித்தொடர்பாளராக இருந்த Gabriel Attal (34)க்குக் கையளிக்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய மாற்றம், மக்கள் ஓய்வூதியம் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது, பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த ஜூனியர் உள்துறை அமைச்சரான Marlene Schiappaவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த மாற்றங்களை வரவேற்றுள்ள நிலையில், அரசியல் விமர்சகர்களோ, இந்த அமைச்சரவை மாற்றம் எந்த வலிமையான அரசியல் செய்தியையும் கொடுக்கவில்லை என்றும், மாறாக, சரியாக தங்கள் கடமைகளைச் செய்யாத அமைச்சர்களை அல்லது தொடர்ந்து பதவியிலிருக்க விரும்பாத அமைச்சர்களை மாற்றும் வேலையை மட்டுமே செய்துள்ளது என விமர்சித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |