ஜி7 மாநாடு இன்று தொடக்கம்: ஜப்பான் சென்றடைந்த மேக்ரான் வெளியிட்ட பதிவு
இன்று தொடங்கும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஜப்பான் வந்தடைந்தார்.
ஜப்பான் வந்தடைந்த முக்கிய தலைவர்கள்
ஜப்பானில் ஜி7 மாநாடு இன்று தொடங்கி 21ஆம் திகதி வரை என மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோர் ஜப்பான் வந்தடைந்தனர்.
ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவிற்கு வந்த அவர்களை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரவேற்றார். பின்னர் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Kyodo
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஜி7 கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ரான் கூறிய விடயம்
இந்த நிலையில் ஜப்பான் சென்றடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜி7 மாநாட்டிற்காக ஜப்பானில் இருக்கிறோம். உக்ரைனின் வெற்றிக்காகவும், சட்டத்தின் அடிப்படையில் அமைதி திரும்புவதற்காகவும் ஒற்றுமையாக, வறுமைக்கு எதிராக போராடும் மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த கிரகத்தில் உறுதியுடன் இருக்கும் எங்கள் கூட்டாளர்களுக்கு ஆதரவையும், உதாரணத்தையும் நிறுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
In Japan for the G7 Summit.
— Emmanuel Macron (@EmmanuelMacron) May 19, 2023
For the victory of Ukraine and the return of peace based on law.
For the solidarity we owe to the populations who struggle against poverty.
To set an example and support our partners who are committed to the planet. pic.twitter.com/ByklcsfUKk