இஸ்ரேலில் மகள்களின் கண் முன்னே கொல்லப்பட்டனர்! வேதனையை பகிர்ந்த இந்திய வம்சாவளி நடிகை
தனது உறவினர்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டது குறித்து இந்திய வம்சாவளி நடிகை மதுரா நாயக் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரா நாயக்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மதுரா நாயக் (Madhura Naik) கலந்துகொண்டார்.
இந்திய தந்தை, இந்திய இஸ்ரேலிய தாய்க்கு பிறந்த இவர், ஹமாஸ் தாக்குதலில் தனது குடும்பத்தினர் சந்தித்த கொடூர சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்த குடும்பம்
அவர் கூறுகையில், "இஸ்ரேலின் டெராட் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கிச்சூட்டில் என்னுடைய உறவுப்பெண்ணும், அவருடைய கணவரும் தங்கள் 6 மற்றும் 3 வயது மகள்களின் கண் முன்னே கொல்லப்பட்டனர். அந்த 6 வயது சிறுமி மீட்கப்படும்போது, பொலிஸை நோக்கி நீங்கள் இஸ்ரேல் பொலிஸா? எனக்கு பக்கத்தில் இருக்கும் அந்த சிறுமியையும் காப்பாற்றுங்கள் என்று கூறினாள்.
வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை. இந்த சம்பவத்தில் என்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டின்போது என்னுடைய சகோதரி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முயன்றார். ஆனால், அவரையும் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர்" என்றார்.
முன்னதாக அவர், தனது பாட்டி மற்றும் அவரது சகோதர சகோதரிகளுடன் 14 வயதில் இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்தார் என குறிப்பிட்டார்.
இந்தியில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள மதுரா நாயக், மராத்தி மற்றும் இந்தியில் 4 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |