30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி - 3வது நாளாக மீட்க கடும் முயற்சி
மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி 3 நாட்களான நடைபெற்று வருவதால், அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி
மத்தியப்பிரதேசம், முங்காவல்லி என்ற கிராமத்தில் கடந்த 6ம் தேதி வீட்டு வாசலில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, வீட்டு அருகே தோண்டப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.
இதை அறிந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தேசிய மீட்புப் படையினரை வரவழைத்தனர். இதனையடுத்து, தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 30 அடி ஆழத்தில் இருந்த சிறுமி தற்போது 50 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ரோபோட் உதவியுடன் குழந்தையை மீட்க நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
#WATCH | Madhya Pradesh | Rescue operation continues to rescue the 2.5-year-old girl who fell into a borewell while playing, in Mungaoli village of Sehore district on June 6.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 8, 2023
A team of experts has arrived at the spot with a robot. Efforts are being made to rescue the child, with… pic.twitter.com/lkVLOtlR8z