காரை நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கியவர்களை சந்தித்த முதலமைச்சர்! அதிகம் பகிரப்படும் வீடியோ
காரை நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கியவர்களை சந்தித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் வீடியோ இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
இன்று காலை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள ஸ்மார்ட் பூங்காவில் தோட்டத் திட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, லால்காட்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கான்வாய் விஐபி சாலை வழியாக வந்தபோது, சாலையில் சிலர் கூட்டமாக குவிந்து நிற்பதைப் பார்த்தார்.
அந்த இடத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்த அவர், உடனே காரை விட்டு கீழே இறங்கி விபத்தில் காயமடைந்த இளைஞர்களிடம் சென்றடைந்தார். அவர்களில் ஒருவர் கானுகானைச் சேர்ந்த சஜிப் மற்றும் மற்றொருவர் அவரது நண்பர். இருவரும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடச் சென்றபோது விபத்துக்குள்ளானார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இரு இளைஞர்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மத்திய பிரதேச முதலமைச்சரின் செயலுக்குப் பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
मुख्यमंत्री @ChouhanShivraj ने एक बार फिर बता दिया कि वे इतने लोकप्रिय क्यों हैं। भोपाल में एक्सीडेंट देख काफिला रुकवाया और ईद मनाने जा रहे घायल युवकों को अस्पताल भिजवाया। @BJP4MP @vdsharmabjp #MadhyaPrades #MPNews #ShivrajSinghChouhan https://t.co/Dz9qMCtpAM pic.twitter.com/XZi2pbjXRf
— Amar Ujala Madhya Pradesh (@AU_MPNews) April 22, 2023